Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சிவாஜியை பின்தொடர்ந்த செய்த விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜிக்கு ஒரு பழக்கம் உண்டு. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே தளத்துக்கு வந்துவிடுவார்.

இதே பழக்கத்தை கடைபிடிக்கிறார் விஜய்.

இது குறித்து,  2002ல் வெளிவந்த பகவதி படத்தை இயக்கிய ஏ வெங்கடேஷ்  பகிர்ந்துகொண்டார்.

“ மேட்டுப்பாளையத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அவர் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே விஜய் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டார்.

இத்தனைக்கும் காலை 8.30 மணிக்கு சூட்டிங் ஆரம்பிக்கும், நீங்கள் 9.30க்கு வந்தால் போதும் என்று கூறினேன். . ஆனாலும் விஜய் இயக்குனர் வருவதற்கு முன்பே அதாவது 8 மணிக்கே வந்து காத்திருந்தார். . அதை கண்டு ஆச்சரியப்பட்டேன்.

மேலும் தான் ஒரு நடிகன் என்ற கர்வம் கொள்ளாது படக்குழுவினரோடு எளிதாக பேசி பழகும் மனம் கொண்டவர் விஜய்.

தனக்கு நடிக்க வராத இடங்களில் இயக்குனரிடம் நீங்கள் நடித்துக் காட்டுங்கள் என்று கூறி அதன் பின்னால் அதை உள்வாங்கி நடிக்கும் ஆற்றல் கொண்டவர். இத்தகைய பண்பும், குணமும் தான் இவருக்கு தளபதி என்ற பெயரை பெற்று தந்தது. மேலும் நடிகர் திலகத்தின் இந்த குணத்தை இப்போது வரை கடைபிடித்து வருவதால் தான் விஜய் இன்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்” என்று இயக்குநர் வெங்கடேஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News