Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

மறைந்த நடிகை சௌந்தர்யா கடைசியாக பேசியது…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சௌந்தர்யா. 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் சென்று இருந்தார்.அப்போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்தார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில், இயக்குனர் ஆர் வி உதயகுமார்  சௌந்தர்யா குறித்து தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.

அவர், “ சௌந்தர்யா போல திறமையான நடிகையை பார்ப்பது அபூர்வம். தெலுங்கில் வருடத்திற்கு 10 படங்கள் கொடுத்து இருந்தார் சௌந்தர்யா. அப்போது ரஜினி சாரோட அருணாச்சலம் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டும் சௌந்தர்யாவால் கொடுக்க முடியாமல் போனது.

பின் ரஜினி சார் என்னிடம் கேட்டுக் கொண்டதால் நான் சௌந்தர்யாவிடம் போன் பண்ணி நீ கண்டிப்பாக ரஜினி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி என்னுடைய மனைவி சுஜாதாவுக்கு சௌந்தர்யாவிடம் இருந்து போன் வந்தது. சௌந்தர்யா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். நான் பிரச்சாரத்துக்கு போறேன். போய்ட்டு வந்து உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு போனார்கள்.அடுத்த நாள் ஏப்ரல் 16-ஆம் தேதி சௌந்தர்யா எனக்கு போன் பண்ணி சார் உங்களை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.

சினிமாவுல நீங்க எனக்கு கொடுத்த வாய்ப்பு மூலம் இந்த அளவிற்கு உள்ளேன் என்று ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தார். நான் கூட ஏன்ம்மா, உனக்கு என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற? என்று நான் கேட்டேன். சௌந்தர்யா ஒன்னும் இல்லை சார், சோர்வா இருக்கு ஆனாலும் போய் ஆகணும் என்று சொல்லி விட்டுActress s போன் வைத்து விட்டார்.

ஆனால், அடுத்த நாளே சௌந்தர்யா இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது” என்று கண்கலங்கியபடி கூறினார் உதயகுமார்.

- Advertisement -

Read more

Local News