Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய காரணம்: சிம்ரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

90-களின் இறுதியிலும் 2000-ம் ஆண்டு முற்பகுதியிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சிம்ரன் விஜயுடன் ஆல்தோட்ட பூபதி பாடலில் நடனமாடியது ஏன் என்பது குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு சில படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடும் வழக்கத்தையும் வைத்திருந்த சிம்ரன் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் பட்டிதோட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிய நிலையில், சிம்ரனின் நடனத்திற்கு பாராட்டுக்களும் குவிந்தது.

ஏற்கனவே விஜயுடன், ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த சிம்ரன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலுக்கு நடனமாடியது ஏன் என்பது குறித்து சிம்ரன் கடந்த 2000-ம் ஆண்டு பேசிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அவர் பேசுகையில், “எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். நல்ல வாய்ப்பு, நல்ல படம், நல்ல நடனம் இருந்தால் கண்டிப்பாக ஒரு பாடலுக்கு நான் ஆடுவேன். ஆனால் நீங்கள் ஒரு முன்னணி நடிகை ஒரு பாடல் நடனத்திற்க்கு மட்டும் எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் என்று மற்றவர்கள் கேட்பார்கள்.

அதை பற்றி நான் சிந்திப்பதில்லை. அந்த மாதிரி நான் முடிவெடுத்து நடமாடிய ஆல்தோட்ட பூபதி பாடல் பெரிய ஹிட்டனது. ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேடிருந்தால் இந்த பாடலை நான் மிஸ் செய்திருப்பேன். இந்த பாடலை பார்த்து பலரும் எனக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News