Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

எம்.ஜி.ஆரின் வந்தியத்தேவன், குந்தவை யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக  பாரதிராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பல சுவாரசியமான தகவல்களை மேடையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

”எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலரும் முயற்சித்தனர். அதிலும்  எம்ஜிஆர் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தை நான் உருவாக்குவதாக இருந்தது.   அதில் கமலஹாசனை வந்தியத்தேவனாகவும், ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். நினைத்தார். ஆனால் அந்த சமயத்தில் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அது நடக்காமல் போனது. நல்ல வேலை நான் அதை எடுக்காமல் போனேன்.

ஒருவேளை எடுத்திருந்தால் நிச்சயம் சொதப்பி இருப்பேன். அதனால் தான் இந்த படத்தை கடவுள் மணிரத்தினத்திடம் கொடுத்திருக்கிறார் “என்று பாரதிராஜா வெளிப்படையாக பேசினார்.

- Advertisement -

Read more

Local News