நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், நாயகன் என அனைத்து வித நடிப்பிலும் சிறந்து விளங்கியவர், மறைந்த நடிகர் நாகேஷ்.
இப்படி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தனக்கு வர காரணமான சம்பவம் குறித்து ஒரு முறை அவரே சொல்லி இருக்கிறார்.
“நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ரயில்வே துறையில் கணக்காளராக இருந்தேன். ஒருமுறை சென்னை மாம்பலம் பகுதியில் ஒரு நாடகத்திற்கு ஒத்திகை பார்த்து வந்தனர். அதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடிகர் சரியாக நடிக்கவில்லை என எனக்கு தோன்றியது. உடனே அங்கு சென்று நடித்து காட்டினேன்.
நாடகத்தின் இயக்குனரோ, உனது நடிப்பு நடிப்பே அல்ல என அவமதித்தார். அப்போதுதான், எனக்குள் இருந்த நடிப்பு ஆர்வம், வெறியாக மாறியது.
என்னுடன் பணிபுரிந்த ஊழியர்களுடன் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தேன். அதில் வயித்துவலி வந்தவன் போல் நடிக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். நாடகத்தை பார்க்க வந்த எம்.ஜி.ஆர். என்னை பாராட்டினார். அதன் பிறகு நாடக மேடைகள் தொடர்ந்தன.. அப்படியே சினிமாவுக்கு வந்தேன்..” என்று சொல்லி இருக்கிறார் நாகேஷ்.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சம்பவம் தூண்டுகோலாகி சாதிக்க வைக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம்.