லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது.
அந்த படத்தின் அனுபவம் பற்றி நடிகர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். படப்பிடிக்குப்புக்கு எல்லோரும் வந்துவிட்டோம். யாருடைய கையிலும் சீன் பேப்பர் இல்லை. லோகேஷ் வந்தார்.
அந்த நண்பர் அந்த மாதிரி சொல்வார். நீங்கள் இந்த மாதிரி சொல்லுங்க என்றார். எனக்கு ஒன்னும் புரியல.. டென்ஷன் ஆயிட்டேன். அந்தமாதிரின்னா…எந்தமாதிரி சொல்லணும் வெறியா கிட்டேன். இவன் கூட நாலு மாசம் எப்படி ஓட்ட போறோம். நான் கிளம்புறேன்னு சொல்லிட்டேன்.
லோகேஷால் அந்த அளவுக்கு மாஸ்டர் படத்தில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்புறம் லோகேஷை கூப்பிட்டு எந்த மாதிரியும் வேண்டாம். எல்லோர் கையிலும் சீன் பேப்பர் கொடுத்துவிடு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டேன் என்றார் விஜய்.