Advertisement

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது பேயிங் கெஸ்டாக ஷோபா வீட்டில் தங்கி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் நடந்து கொள்ளும் விதம் வீட்டில் எல்லோருக்கும் பிடித்து விட்டதாம். அதனால் அவரை அனுப்ப மனம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இங்கு தங்கிக் கொள்ளுங்கள் என்று ஷோபா அப்பா கூறிவிட்டாராம்.

ஷோபா மீது காதல் கொண்ட சந்திரசேகர் அவரிடம் சொல்லாமல் 5 வருடம் மனதுக்குள் பூண்டி வைத்துள்ளார். அப்போது தான் சினிமாவில் கொஞ்சம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது சந்திரசேகருக்கு. அப்போ ஷோபாவின் அம்மா இவன் ரொம்ப நல்ல பையனா இருக்கான் நீ இவை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான்  எஸ்.ஏ.சி மீது காதல் வந்தது என்று நெகிழ்ச்சியுடன்  பகிர்ந்து கொண்டார் ஷோபா சந்திரசேகர்.