இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மூலமாக பான் இந்தியா இசை அமைப்பாளரானார்.
அவ்வப்போது தனி இசை ஆல்பங்களை வெளியிடும் அவர், சமீபத்தில் ‘ஓ பேபி’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தெலுங்கில் இது ‘ஓ பாரி’ என்ற பெயரில் வெளியானது. இப்பாடலை ரகீப் ஆலம் எழுதியுள்ளார்.
தற்போது இந்தப் பாடல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாடலில் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்ற புனித வாசகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.