Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் இணைந்து படம் செய்யவுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது நடிகர் சிவகார்த்திகேயன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘மாநாடு’ படம் வெளியான சமயத்திலேயே வெங்கட் பிரபு உடன் சிவா இணைய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அந்த சமயத்தில் இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியதால் அந்தப் படங்களை முடித்துவிட்டு இருவரும் இணையலாம் என்று சொல்லப்பட்டது.

வெங்கட் பிரபு இப்போது நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

சிவகார்த்திகேயன் தற்போது தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் ‘பிரின்ஸ்’. படத்திற்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படம் மற்றும் மண்டேலா’ படத்தின் இயக்குநரான அஷ்வின் இயக்கும் ‘மாவீரன்’ என்று 2 படங்களில் நடிக்கவுள்ளார்.

இருவரும் தங்களின் இந்த கமிட்மென்ட்களை முடித்த பின்னர் இணையலாம் என்றும், அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News