Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு 2017-ம் ஆண்டு நடித்திருந்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டு ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளரிடமும், விநியோகஸ்தரிடமும் சிலர் போன் மூலம் மிரட்டல் விட்டனராம்.

இதையொட்டி ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ இன்றைக்கு ஒரு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அன்புடையீர் வணக்கம்.

‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. 

இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திர மாட்டோமா என்று அத்தனை பேரும் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும்.

அதை விட்டுவிட்டு அந்தத் தயாரிப்பாளருக்கும், படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் போன் செய்து “இந்த படம் வெளியாகணும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும்…” என்று சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும்.

‘AAA’ படத்திற்கும், ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் திரு. சிம்பு அவரது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார். மீண்டும் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன் பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டப் பஞ்சாயத்து மூலமாகப் பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அதைவிட்டுவிட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்து விடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகையால் மீண்டும் ஒரு முறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்...” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News