விஜய் தொலைக்காட்சியில் மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 2023 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், சிறகடிக்க ஆசை தொடர் குழுவுக்கு ரசிகர்கள் பலர், சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
