Advertisement

டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும் சந்தானத்தின் ‘லவ் பைட்’!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த சந்தானம், தற்போது கதாநாயகனாகத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜாம்பிகளை மையமாகக் கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ளார்.

கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, ‘லவ் பைட்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 18-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply