சிறு வயதிலேயே ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீநிஷா, ‘அவன் இவன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு மலையோரம்’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின்போது சாம் விஷாலுக்கும் ஸ்ரீநிஷாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இருவருக்கும் நவம்பர் 11-ம் தேதி சென்னையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Add a Comment
