ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் சிறை ஹீரோவின் ‘ராவடி’ படத்தின் ‘அட்ரா பரமா’ பாடல்!

 ‘சிறை’ படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற எல்.கே. அக்ஷய் குமார்ம கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ராவடி’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் பாசில் ஜோசப் சத்யன், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களின் உலகத்தைப் பின்னணியாகக் கொண்டு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து, டிசம்பர் 24-ம் தேதி ‘ராவடி’ திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே, படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ நேற்று வெளியிடப்பட்டது. அறிவு பாடியுள்ள இப்பாடலுக்கு உதய் வரிகள் எழுதியுள்ளார். வெளியானதும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்தப் பாடல், படத்தின் வருகைக்காகக் காத்திருப்பவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply