டைம் லூப் கதைக்களத்தில் உருவாகிறதா சந்தானத்தின் ‘அதிசய பிறவி’?

நடிகர் சந்தானம் தற்போது ‘லவ் பைட்’, ‘அதிசய பிறவி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘லவ் பைட்’ திரைப்படம் ஜோம்பி கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்.

மற்றொரு படமான ‘அதிசய பிறவி’யை அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இப்படம் டைம் லூப் அம்சத்தைக் கொண்டிருந்தாலும், அதையே மையமாகக் கொண்டு முழுக்க முழுக்க கதை நகராது என சந்தானம் தெரிவித்துள்ளார். டைம் லூப் கதையுடன் மற்றொரு புதுமையான அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படத்தின் கதைக்கு இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருந்ததால், ரஜினிகாந்த் நடிப்பில் 1990-ம் ஆண்டு வெளியான ‘அதிசய பிறவி’ படத்தின் தலைப்பைப் பெற்றதாகவும் சந்தானம் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply