பிறந்தநாளில் ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்த ஷாருக்கான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 61-வது பிறந்தநாளான நவம்பர் 2-ம் தேதி, மும்பை பாந்த்ராவில் உள்ள தனது ‘மன்னத்’ இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.வழக்கமாக நள்ளிரவில் தனது வீட்டின் பால்கனியில் தோன்றி ரசிகர்களைச் சந்திக்கும் ஷாருக்கான், தற்போது மன்னத் இல்லத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் அந்த நிகழ்வைத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக, மாலை நேரத்தில் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

Add a Comment

Leave a Reply