கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் ‘ஜெடூசி’!

கல்விக்கு ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லை என்பதையும், பெண்களின் கல்விக்கு பெற்றோர் வழங்க வேண்டிய ஆதரவையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெடூசி’. ஒரு பெண் தனது எதிர்காலம் குறித்து ஆசைப்படுவது மட்டும் போதாது; அந்த கனவை அடைய குடும்பத்தின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதையும் இப்படம் பேசுகிறது.

இன்றைய சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளையும், அவர்களை பாதுகாப்பாக வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் கதையின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதர் கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் அருவி மதன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், பிளாக் பாண்டி, எழுத்தாளர் பாவா செல்லதுரை, அசோக் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நட்ராஜ் ஏகாம்பரம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அவர் விஜயசாந்தி ஸ்ரீதருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

விக்னேஸ்வரன் இசையமைக்க, சந்தோஷ் கே பின்னணி இசையமைத்துள்ளார். எஸ்.பி. அஹமது படத்தொகுப்பையும், நாகர்ஜுன் வி.எஸ் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர். அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ‘ஜெடூசி’ திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

Add a Comment

Leave a Reply