பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, “எனக்கும் என் கணவருக்கும் 10 வயது வித்தியாசம் உள்ளது. ஆனால், அது எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை. நீங்கள் விரும்பும் குணாதிசயங்கள் அனைத்தும் கொண்ட ஒருவரை வாழ்க்கை துணையாக பெறும்போது, வயது என்பது ஒரு எண்ணாக மட்டுமே இருக்கும். பெரிதாக தெரியாது” என்று கூறினார்.
Add a Comment
