புற்றுநோயுடன் போராடும் நடிகை உமா சங்கரி!

சொக்க தங்கம், கோவை பிரதர்ஸ்’, ‘தென்றல்’, ‘சூரி’, ‘கடல் பூக்கள்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை உமா சங்கரி.இந்த நிலையில், நடிகை உமா சங்கரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் புற்றுநோய்க்கான 2-வது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை பெற்று வருகிறார்.தனது உடல்நிலை குறித்து பேசிய உமா சங்கரி, “சவாலான நாட்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருகிறேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டி வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading