கட்டா குஸ்தி-2 வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி கூட்டணியில் வெளியாகி உள்ள படம் ‛கட்டா குஸ்தி 2′. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்களில் 25 கோடி வசூலை கடந்துள்ளது. படத்தின் வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்க நகையும், ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு 70 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சொகுசு காரும், நாயகி உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 40 கிராம் வெள்ளி நாணயத்தையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading