ஷாருக்கானின் திரைப்பயணத்திலேயே மிக அதிக செலவில் கிங் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ள செய்தியில், ”கிங் படம் ஆரம்பத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லராகத் தான் தொடங்கப்பட்டது. ஆனால் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் சித்தார்த்தின் பெரிய லட்சியத்தால், இது இந்திய சினிமா இதுவரை கண்டிராத பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு மெகா பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது. மேலும், ஷாருக்கானின் சம்பளம் மற்றும் படத்தின் விளம்பரச் செலவுகள் சேர்க்கப்படாமல், கிங் படத்தின் தயாரிப்புச் செலவு மட்டுமே சுமார் ரூ. 450 கோடி என்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான ஷாருக்கானின் ஜவான் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டிலும், பதான் படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டிலும் உருவானது. கிங் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் ஆக்ஷன் தரத்தை ஷாருக்கான் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளார்.
Add a Comment
