ரசிகர்களின் மனதை கவரும் ‘சின்னச் சின்ன ஆசை’ படத்தின் டிரெய்லர்!

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சின்னச் சின்ன ஆசை’. மனித உறவுகள், அன்பு மற்றும் வாழ்க்கையின் உணர்வுப்பூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசி நகரில் எதிர்பாராத சூழ்நிலையில் தொலைந்து போகும் ஒரு பெண்ணாக மதுபாலா நடித்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு உதவியாக இருக்கும் இந்திரன்ஸுக்கும் அவருக்கும் இடையே உருவாகும் நெருக்கம், மனிதநேயம் மற்றும் உறவுகளின் மகத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம், வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, ஜாபர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘சின்னச் சின்ன ஆசை’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading