பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அஞ்சு குரியன், சமீபத்தில் விடுமுறையைக் கழிக்க இந்தோனேசியாவின் பாலி (Bali) தீவுகளுக்குச் சென்றார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட ஜப்பானிய வகை ஸ்பா மசாஜ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில் அவர் காட்டிய மசாஜ் பில் தான் இப்போது பேச்சுப் பொருளாகியுள்ளது. மசாஜுக்காக 7.25 லட்சம் செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். “7.25 லட்சமா?” என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அஞ்சு குரியன் ஒரு சுவாரசியமான விளக்கத்தையும் அளித்துள்ளார். அவர் குறிப்பிட்ட 7.25 லட்சம் என்பது இந்தோனேசிய ரூபியா (Indonesian Rupiah) கணக்காகும். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.4,000 மட்டுமே.”பாலியில் 7.25 லட்சம் என்பது இந்திய மதிப்பில் வெறும் 4 ஆயிரம் தான்” என்று அவர் ஜாலியாகப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Add a Comment
