‘LIK’ திரைப்படம் தொடங்கிய தருணமே எனக்கு மிகவும் தனிப்பட்ட உணர்வுகளுடன் கூடிய பெரிய பயணமாக இருந்தது… இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கம்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ ஆகும். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை நயன்தாரா மற்றும் Seven Screen Studio இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டு கவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு தனது நன்றியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் படம் தொடங்கிய தருணமே எனக்கு மிகவும் தனிப்பட்ட உணர்வுகளுடன் கூடிய ஒரு பெரிய பயணமாக இருந்தது. அதற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு நான் மனமார்ந்த நன்றி கூற வேண்டும். அவருக்கு நான் கொண்டுள்ள நன்றியுணர்வு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். அதற்கு நான் செய்யக்கூடிய ஒரே பதில், சாதனைகளை படைக்கும் வகையிலும், நீண்ட காலம் பேசப்படும் ஒரு சிறந்த திரைப்படத்தை வழங்குவதும் தான். இந்தப் படத்திற்காக நான் முழு உழைப்பையும் செலுத்தியுள்ளேன். படம் உருவாகிய விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading