‘அரசன்’ படத்தில் இணைகிறாரா நடிகர் விக்ராந்த்? வெளியான புது அப்டேட்! #ARASAN

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சிலம்பரசனை வைத்து ‘அரசன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், ‘வட சென்னை’ திரைப்படத்தில் இடம்பெற்ற சில முக்கிய கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விக்ராந்த் புதிதாக இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் கமலேஷும் இந்தப் படத்தில் இணைகிறார் என கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன், விஜய் சேதுபதி மற்றும் விக்ராந்த் தொடர்பான முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading