கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ வெளியான முக்கிய அப்டேட்!

‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘ஸ்டார்’, ‘டாடா’, ‘மாஸ்க்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக திகழ்கிறவர் கவின். தற்போது விஷ்ணு எடவன் இயக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பிரபு, கே. பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அந்த இளைஞனின் காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்கிறாளா இல்லையா என்பதே இப்படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் “ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் படத்தின் பாடல், டீசர் அல்லது வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading