அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்திற்கான அனிருத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். குறிப்பாக தற்போது அட்லி இயக்கும் தனது 22 வது படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக அனிருத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வருகிற ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுள்ளார் அனிருத். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஹைடெக் ஆக் ஷன் கதையில் உருவாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading