சேகர் கம்முல்லா இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான படம் ‘லவ் ஸ்டோரி’. நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் உருவான இந்த படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்திருந்தனர். முழு நீள காதல் படமாக இந்த படம் அமைந்திருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளைத் தாண்டி இருவரும் காதலிப்பதாக இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது. இத்திரைப்படத்தில் சாய் பல்லவியின் நடனம் மற்றும் நடிப்பிற்கு பெரும் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது இந்த படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. காதலர் தினமான வரும் பிப்ரவரி 14ஆம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Add a Comment
