புஷ்பா பட வெற்றிக்கு பிறகு, இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் பான் இந்திய அளவில் தனது கெத்தை காட்டி வருகிறார். சூர்யாவின் ‘கங்குவா’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தனுஷின் ‘குபேரா’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.
அதோபோல் சூர்யாவின் ‘கங்குவா’வின் கிளிம்ஸ், போஸ்டர்கள் ஆகியவை அதிக கவனம் ஈர்த்து வரும் நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகவிருப்பதால், இப்படத்திற்கு தனிக்கவனம் செலுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். விரைவில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பின்னணி இசை வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் முடிந்த பிறகு பின்னணி இசை வேலைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷாலின் ‘ரத்னம்’ படத்திற்குப் பிறகு, இது டிஎஸ்பியின் அடுத்த பெரிய இசை படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் அடுத்ததாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடல்கள் கொடுக்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டார் டிஎஸ்பி. ‘வீரம்’ படத்திற்குப் பிறகு அஜித்துடன் டிஎஸ்பி இணைந்திருப்பதால் புதுவிதமான இசையை எதிர்பார்க்கலாம்.
இப்படி தொடர்ந்து சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதுவும் ஐந்து மொழிகளில் வெளிவருகிறது என்பதால், பான் இண்டியா ஸ்டைலில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் இன்ட்ரோ மியூசிக்கும் வெளியாகியுள்ளது.
டி.எஸ்.பி.க்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளும் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதால், ‘புஷ்பா’ பாடல்களில் ஒவ்வொரு மொழிக்குமே பாடல் வரிகளில் தனி கவனம் எடுக்கிறார். இப்போது ‘புஷ்பா 2’, ‘குபேரா’, ‘கங்குவா’விற்கும் கடினமாக உழைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.