Touring Talkies
100% Cinema

Monday, October 20, 2025

Touring Talkies

வலிமை பட நடிகைக்கு நிச்சயதார்த்தமா? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ மற்றும் அஜித் நடித்த ‘வலிமை’ போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. சமீப காலமாக, இவர் நடிப்பு பயிற்சியாளர் ரச்சித் சிங் என்பவரை காதலித்து வருவதாக பல பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. அதே சமயம், சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் ஒரு செய்தி வெளியானது.

ஆனால் அது உண்மையா அல்லது வதந்தியா என்பதற்கான உறுதிப்படுத்தல் எதுவும் இன்றி, அந்த செய்தி உறுதிப்படுத்தப்படாததாகவே இருந்து வந்தது. இதற்கிடையில் ஹூமா குரேஷியும் எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருப்பதாகவும் தெரிய வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தம்மா’ படத்தின் பிரிமியர் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிகளில், ஹூமா குரேஷி தனது காதலருடன் கைகோர்த்தபடி கலந்து கொண்டார். இதையடுத்து, அந்த நிச்சயதார்த்தம் வதந்தியாக இருக்க முடியாது‌. அது உண்மைதான் என பாலிவுட் ஊடகங்கள் மீண்டும் உறுதி செய்துள்ளன. மேலும், ஹூமா குரேஷியும் ரச்சித் சிங்கும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

- Advertisement -

Read more

Local News