இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து கைதி 2 படத்தை இயக்க இருக்கிறார். கார்த்தி நடித்த ‘கைதி’ படம் 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றதால், ‘கைதி 2’ உருவாகும் என்று அப்போதே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ‘கைதி 2’ படத்தை, ‘கூலி’க்குப் பிறகு இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்தவருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படமும் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில்’ இடம் பெறும் என கூறப்படுகிறது.

இதனால் இதில் கமல்ஹாசன், விக்ரம் கேரக்டரில் தோன்ற இருக்கிறார் என்றும் அதேபோல் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் இதில் இருக்கும் என்கிறார்கள். விஜய்யின் ‘லியோ’ படத்தில் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அதேபோல் இதில் விஜய் வாய்ஸ் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ளதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்கவுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
