Thursday, October 17, 2024

ராணுவ கதைக்களத்தில் உருவான பரிசு திரைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் கலா அல்லூரி எழுதி இயக்கியுள்ள படம் “பரிசு”. இந்தப் படம் நாயகியை மையமாகக் கொண்டது, இதில் ஜான்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜெய்பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், சென்ராயன், சச்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கலா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது, மற்றும் சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் கதை பற்றி இயக்குநர் கலா அல்லூரி கூறியதாவது: “ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஒரு தந்தை, தனது மகளை ராணுவத்தில் சேரச் சொல்லுகிறார்.

மகள் அப்பாவின் விருப்பப்படி ராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தான் படத்தின் மையக்கரு. நம் நாட்டில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள், அரசாங்கமும் அதற்குரிய வாய்ப்புகளை வழங்குகிறது. இதே போன்று, இப்படத்தின் நாயகியும் தடைகளை மீறி சாதனைகளை படைக்கிறார். என்ன சாதனை, எப்படி என்பதே கதை. மேலும் விவசாய பிரச்சினை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய கருத்துகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News