Wednesday, April 10, 2024

ரஜினியின் 171வது படத்தின் முதல் தோற்றம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய நான்கு வெற்றிப் படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஐந்தாவது முறையாக இணையும் படம் இது. இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்த்துடன் இணையும் படம் இது. இந்தப் படத்திற்காக அதிக எண்ணிக்கையிலான படைப்பாளிகளை கொண்டு கதை விவாதம் நடத்தி வரும் இயக்குநர் லோகேஷ் கனகாராஜ் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று மாலை வெளியானது. இதில் ரஜினிகாந்த் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த முதல் தோற்றத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. ‘தலைவர் 171’ படத்தின் பெயருடன் கூடிய டீசர் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News