Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான கதை… பாடல் கொடுக்காமல் தாமதம் செய்த யுவன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்தின் சினிமா பயணத்தில் தவிர்க்க முடியாத திரைப்படம் தான் விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா திரைப்படம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இந்த படத்தில் கேங்ஸ்டாராக இதுவரை நாம் பார்க்காத அஜிதாக நடித்து மாஸ் காட்டியிருப்பார்.இந்தபடம் அதுபோல நடிகை நயன்தாராவிற்கும் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா மற்றும் நமீதா நடித்திருப்பார்கள். கூடவே பிரபு, ரகுமான், சந்தானம் போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்து‌ அசத்தியிருப்பார்கள்.

பில்லா படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்தது அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “மை நேம் இஸ் பில்லா” பாடல் தான். ஆனால் அந்த பாடல் உருவான விதம் தான் பலரையும் வியக்க வைத்தது என்றால் மிகையாகாது. அதாவது நாளைக்கு பாடலுக்கான படபிடிப்பு என்றால் அதற்கான செட்டெல்லாம் போட்டு தயாராக இருந்த நிலையில் யுவன் இந்த பாடலை கொடுக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்.

இதைக் கண்டு விஷ்ணுவர்தன் பாடல் எங்கே என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார்.அதற்கு யுவன் “இதோ வந்துடும்” என்று சொல்லியே கடைசி வரை பாடலை கொடுக்கவே இல்லையாம். அதனால் அந்த பாடல் இல்லாமலேயே அந்த பாடல் காட்சியை விஷ்ணு படமாக்கியுள்ளார்.இதற்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் எப்படி மியூசிக் இல்லாமல் டான்ஸ் ஆட வைப்பது என்று கேட்டு தயங்கியிருக்கிறார்.

விஷ்ணுவர்தன் அஜித்துக்காக யோசித்த ஸ்டைலை மியூசிக் இல்லாமல் அஜித்தை வைத்து எடுத்து விட்டாராம். அதற்குப் பிறகு யுவன் துண்டு துண்டாக பாட்டை அனுப்ப இதை பார்த்த அஜித் என்ன விஷ்ணு இது என்று கேட்டிருக்கிறார், அதற்கு விஷ்ணு சார் இன்னும் பாடல் ரெடி ஆகல என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அஜித் சரி ஓகே பரவாயில்லை என்று சொல்ல இப்படியே துண்டு துண்டாக அந்த பாடல் காட்சியை எடுத்து படமாக்கினார்களாம். ஆனால் திரையில் பார்க்கும்போதுதான் அந்த பாடலுக்கு எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி கொண்டுள்ளார் விஷ்ணுவர்தன்.

- Advertisement -

Read more

Local News