குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற பரபரப்பான கிராமத்து படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது கடைசி படமான காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் தோல்வியடைந்தது. இப்போது அவர் தனது மகனை வைத்து சுள்ளான் சேது எனும் படத்தை இயக்கி வருகிறார்.அடுத்ததாக நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகிய இருவரையும் முன்னணி கதாபாத்திரங்களில் வைத்து முத்தையா படம் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1988ல் நடிகர்கள் பிரபு மற்றும் கார்த்திக் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது அவர்கள் மகன்களான விக்ரம் பிரபு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர் என்பது திரையுலகில் பெரும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.
இயக்குனர் முத்தையா விஷாலை வைத்து மருது படத்தை இயக்கியிருந்தார்.மீண்டும் விஷாலுடன் கூட்டணி அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.