Wednesday, April 10, 2024

மீண்டும் மோதும் ரஜினி அஜித் ? கசிந்த புதிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை எட்டவுள்ள நிலையில் ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் துவங்கியது. அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா,அர்ஜுன், ஆரவ் நடித்து வருகின்றனர்.

வெகுவாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு கடும் பனிபொழிவால் தடைபட்ட நிலையில் படக்குழுவினர் சென்னை திரும்பினர். சில வாரங்களுக்கு முன்பு அஜித் அவர்களுக்கு அறுவைசிகிட்சை நடைபெற்று ஓய்வில் உள்ளார். மீண்டும் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என் தெரியாமல் ரசிகர்கள் கவலையில் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே நிதி நெருக்கடியில் லைக்கா நிறுவனம் இருப்பதால் படம் கைமாற வாய்ப்புள்ளதாக பல வதந்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என்றும் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் அனைவரும் விடாமுயற்சி படத்தினை பற்றிய தகவல்களையே எதிர்நோக்கி உள்ளார்கள். வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி இத்திரைப்படம் வெளியாகும் என பேசப்பட்டு வந்தது. ஆனால் 70 நாட்கள் மீதமுள்ள படப்பிடிப்பு எப்போது துவங்கி முடிவுற்று படம் வெளியாகும் என ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தீபாவளியை முன்னிட்டு விடாமுயற்சி படத்தை வெளியிட படக்குழு யோசிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. முன்னரே தீபாவளி பண்டிகை அன்று லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் விடாமுயற்சி மற்றும் வேட்டையன் திரைப்படங்கள் ஒரே நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்பதால் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லாத நிலையில் ரசிகர்கள் இடையே இத்தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

- Advertisement -

Read more

Local News