Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

மத்திய பிரதேச கோவிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கன்னா மற்றும் வாணி கபூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் மகாகாலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரபல நடிகர், நடிகைகள் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், நடிகைகள் ராஷி கண்ணா மற்றும் வாணி கபூர் ஆகியோர் மகாகாலேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை வாணி கபூரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ‘ஜெய் மஹாகாலேஸ்வரர்’ என பதிவிட்டுள்ளார்.

சாமி தரிசனம் முடிந்ததும் நடிகை ராசி கண்ணா, “ஜெய் ஸ்ரீ மஹாகாலேஸ்வரர், மகிழ்ச்சியாக உணர்ந்தேன்” என்றார். உண்மையில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக உணர்ந்தோம். “மகாகாலேஷ்வர் எங்களை மீண்டும் அழைப்பார் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் ராஷி கண்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மெகா ஹிட் ஆனது, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News