Wednesday, April 10, 2024

நண்பருக்கு படவாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், தனது ‘ஜி ஸ்குவாட்’ என்ற நிறுவனத்தின் மூலம் படத்தயாரிப்பிலும் இறங்கி உள்ளார்.

ஏற்கனவே அவரது நிறுவனம் மூலம் தனது நண்பர் ‘உறியடி’ விஜயகுமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், இப்போது ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தை கதை எழுதி தயாரிக்கிறார். இவர் லோகேஷ் கனகராஜின் படங்களில் பணியாற்றிவர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஹாரர் கதை களத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News