இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான ‘மனோஜ் பாரதிராஜாவின்’ மறைவின் போது நேரில் வர இயலாமல் சொல்லொண்ணா துயரத்தில் உருக்கத்துடன் வீடியோ வெளியிட்டு மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து மனோஜ் பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய வழிபாடு செய்தார். தற்போது தனது நண்பர் பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து உரையாடி அவரோடு நேரத்தை செலவிட்டு அவரை ஆறுதல் படுத்தியுள்ளார் இளையராஜா.