இயக்குனர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் தயாரித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைக்க, ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் மகிழ்ச்சியுடனும் பொழுதுபோக்குடனும் நிறைந்த உணர்ச்சி ரோலர்கோஸ்டர் ஆக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள் சிம்பு மற்றும் ஆர்யா தங்களது சமூக வலைதளங்களில் இந்த டீசரை வெளியிட்டனர், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
