Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தேவா என்ற கதாபாத்திரத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த்… ரஜினி-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி தயராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார், படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றில் சுருதி ஹாசன் நடிக்கின்றார். இவருடன் சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் விரைவில் நடைபெறும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.அதன்படி வெளியிடப்பட்ட கதாபாத்திர தோற்றங்களில் நடிகர் நாகார்ஜுனா, நடிகை சுருதி ஹாசன், நடிகர் சவுபின் சாஹிர், நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் உபேந்திரா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியானது.

இதற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயரை என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது, ‘கூலி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு வெளியிட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News