Wednesday, April 10, 2024

தெற்கில் இருந்து வடக்கிற்கு வந்த ரத்னம் விஷால்! சிங்கம் 4 வருமா? அருவா வராதா? தகவல் சொன்ன ஹரி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

என் ரூட்ட பத்தி தான் உங்களுக்கு தெரியுமே அது எப்பவும் தனி ரூட் தான். எக்ஸ்பிரிமெண்ட் எல்லாம் பண்றது இல்ல, டைரக்டா களத்தில் இறங்குகிறது தான் அதுதான் ரத்தினம்.‌ நானும் விஷாலும் சேர்ந்து பண்ற மூன்றாவது படம் இது. இதுல பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம், மேனன், யோகி பாபு-ன்னு ஒரே கலகலப்பான கூட்டம் நடிச்சிருக்காங்க. இப்படி ரத்தனத்தின் ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் டைரக்டர் ஹரி.

தாமிரபரணி, பூஜை படத்தில் இருக்கிற மாதிரி இல்லாம, இதுல ஃபேமிலியோட கான்செப்ட் குறைச்சுட்டு ஃபுல்லா ஆக்ஷன் இறக்கி இருக்கேன். இந்த படத்துல மொத்தம் எட்டு ஆக்சன் சீன்ஸ் இருக்கும். இது நிச்சயமா இளைஞர்களோட படமாக இருக்கும். கதைக்கு ஏத்த மாதிரி தான் ஆக்சன் சேர்த்திருப்பேன். இது முதன் முதலா நான் வட மாவட்டங்களை பின்னணியா வச்சு எடுத்திருக்க படம். என் படத்துல பெரிய விஷயம் அப்படின்னாலே பரபரப்பான கட்டிங், ஸ்பீடு, சேசிங், ஃபைட், தேடுவது இதெல்லாம் தான். ஆடியன்ஸ்க்கு இப்படி ஸ்பீடு இருந்தா தான் புடிக்கும் அப்படின்றதுக்கு ஏத்த மாதிரி இந்த படத்தை கொண்டு வந்து இருக்கேன்.

இதுல ஹீரோ பாசத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்குற பையன் , அவன் ஒரு பொண்ண பார்த்ததிலிருந்து அவன் இழந்ததெல்லாம் அவனுக்கு கிடைச்ச மாதிரி உணருரான். அவன் அந்த பொண்ணோட எப்படி ட்ராவல் பண்றான் அவனுக்கு வர பிரச்சனை, அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் அப்படின்றது தான் இந்த படத்தோட கதை. இதுல நிறைய திருப்பங்கள் இருக்கும், யாரும் கைல எடுக்காத ஒரு பிரச்சனையை நான் இதுல எடுத்துருக்கேன். இதில் வர சண்டை காட்சி நீங்க சீட் நுண்ணிக்க வந்து தான் பாக்குற மாதிரி இருக்கும். இது என்னுடைய ஸ்டைல்ல நிஜமான கமர்சியலா படமா அமையும்.

சினிமால கதை நல்லா அமையனும், நல்ல புரடுயூசர் வேணும், அப்படி இருக்கிறப்போ ஹீரோவுக்கு நல்ல ஹீரோயினி அமையும் அப்படின்றது தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு தமிழ் பொண்ணு நடிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு புரிஞ்சுகிட்டு நல்ல தமிழ் தெரிஞ்ச பொண்ணவும் புரிஞ்சு நடிக்கிற பொண்ணாவும் பவானிசங்கர் கண்டிப்பா இருப்பாங்க அப்படின்னு அவங்கள தேர்வு செஞ்சேன்.நடிப்பு நடனம் அப்படின்னு எல்லா விஷயத்திலும் உழைக்குற பொண்ணு அவங்க. ஏன் கடைசி படமா நான் யானை படுத்துக்கோ இவங்க தான் ஹீரோயின்.

யோகி பாபுவ மண்டேலா படம் பார்த்ததிலிருந்து எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. என் படத்துல அவருக்கு வேற வேற கேரக்டர் கொடுத்து அழகு பார்த்துட்டு இருக்கேன். சமுத்திரக்கனி அவர்கள ரொம்ப நாளாக கவனிச்சேன். கொடூரமான வில்லனா, அன்பான அப்பாவா, அருமையான புருஷனா என எல்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி அருமையா வந்து நடிப்பாரு.

என்ன கண்டிப்பான டைரக்டர் அப்படின்னு சொல்ல காரணம் இங்க பணம் அதிகமா புழங்குற இடம்‌.காலம் பொன்னானது, கமர்சியலா படம் பண்ணும் போது ஹீரோக்களுக்கு என் மேல மரியாதை அதிகமாக இருக்கு. அவங்க சூட்டிங்கு லேட்டா வந்தா நான் விரும்ப மாட்டேன் அப்படின்ற விஷயம் அவங்களுக்கு நல்லாவே தெரியும். சூர்யாவோட அஞ்சு படம், விஷாலோட மூணு படம், விக்ரமோட மூணு படம் அடுத்தடுத்து தனுஷ், சிம்புனு நம்மகிட்ட விஷயம் இல்லாட்டி வருவாங்களா? சக்சஸ் ஃபுல் ஆர்டிஸ்ட் வைத்து நான் சக்ஸஸ்ஃபுல்லா படத்தைக் கொடுத்து இருக்கேன்.

சிங்கம் 4 மற்றும் அருவா வருமா அப்படின்ற கேள்விக்கு, எங்க போனாலும் இத மட்டுமே நிறைய கேட்டுட்டு இருக்காங்க. சிங்கம் படத்த ஹாட்ரிக் அடிக்கிற மாதிரி அடிச்சாச்சு. இதுக்கு அப்புறம் ஒரு பிரமாதமான போலீஸ் ஸ்டோரி ரெடியா இருக்கு. அது யாருக்கு அமையப்போகுதுனு தெரியல. சிங்கம் 4 பத்தி காலம் தான் பதில் சொல்லும். அருவா படத்துக்கு பிளான் அப்படியே இருக்கு. நீங்களே பாருங்க சிங்கம் 4 வைக்காம அருவானு வச்சிருக்கோம். வேறொரு புது படத்தை ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதைப்பற்றி சொல்ல இது சரியான நேரமா இருக்காது. எல்லாரும் நினைக்கிற மாதிரி எனக்கும் சூர்யாவிற்கும் பிரச்சனை அப்படின்றது எதுவுமே இல்ல. நாங்க ரெண்டு பேரும் அன்பாகவும் நட்பாகவும் இருக்கிறோம். மறுபடியும் சூழல் வரும் போது அருவா ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News