நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டு வெளிவந்து அவருக்கு சிறந்த விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய தங்கலான் படத்தில் விக்ரம் தனது நடிப்பை இறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படமும் ரிலீஸுக்குத் தயாராகி, ஆனால் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் “வீர தீர சூரன்” படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.நேற்று தென்காசியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ஒட்டி, படக்குழுவினர் விக்ரம் மற்றும் துஷாரா இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் விக்ரமும் துஷாரா விஜயனும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர்.இந்தப் படத்தில் விக்ரம் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றும், இப்படத்தில் பெரிய மாஸ் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் எனக் கூறப்படுகிறது. விக்ரம் இங்கே ஒரு சாதாரண மனிதனாக தோன்றுகிறார், ஆனால் அவரது நடவடிக்கைகள் அதற்கு மாறாக இருக்கும் எனத் டைட்டில் டீசர் காட்டுகிறது.டீசரில், விக்ரம் ஒரு சாதாரண மளிகைக்கடை நடத்தி, தன்னுடைய எதிரிகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதை டீசரில் கண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.