தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தற்போது, துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘பைசன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனுபமா, துருவ் விக்ரமைப் பாராட்டியுள்ளார்.
“என் வாழ்க்கையில் பல ஹீரோக்களுடன் கதாபாத்திரங்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் துருவ் போன்ற அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகரை இதுவரை சந்தித்ததில்லை. இதுவரை எனது திரை வாழ்க்கையில் இணைந்து நடித்த சிறந்த நடிகர் துருவ் தான்,” என அனுபமா கூறியுள்ளார்.