நடிகர் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் முழு ஷூட்டிங்கும் முடிவடையவுள்ளது.விஜய்யின் மகன் கேரக்டரின் டீ ஏஜிங் வேலைகளுக்காக, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

அங்கு விஜய்யுடன் இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு, இதற்கான பணிகள் விரைந்து நடந்தன.இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்க்கு வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ளார். மேலும், விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் போன்றோர் கேமியோ வேடங்களில் தோன்றியுள்ளனர்.

நடிகர் அஜ்மல் தன்னுடைய போர்ஷன்களை முடித்து விட்டதாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, சிறப்பான புகைப்படமும் பகிர்ந்துள்ளார்.அஜ்மல், இந்த படத்தில் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், தனது அடுத்த படத்தின் கதாபாத்திரமும் அப்படியே சிறப்பாக அமையும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
