Wednesday, April 10, 2024

திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுருதி ஹாசன், தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிரமாண்ட தயாரிப்பில் வெளியான ‘சலார்’ இந்திப் படத்தில் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன், அவ்வப்போது பாடல் எழுதி பாடி இசை அமைக்கவும் செய்தார்.

இந்த நிலையில் அவரது தந்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘இனிமேல்’ என்கிற இசை ஆல்பத்திற்கு இசையமைத்து பாடியவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அதில் நெருக்கமாகவும் நடித்திருந்தார்.

அந்த இசை ஆல்பத்தில் காதல், திருமணம், சண்டை என்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இனிமேல்’ இசை ஆல்பம் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜுடன் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம், ” உங்கள் திருமணம் எப்போது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

“எப்போது திருமணம் என்று தெரியவில்லை. எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லை” என்று ஸ்ருதிஹாசன் பதிலளித்தார்.

திருமணம் என்ற கேள்வி வந்தாலே நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் சற்று கோபத்துடன் தான் பதில் அளிப்பார். இந்த முறை அவர் கோபப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட “ஏன் நடிகைகளிடம் மட்டும் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். வேறு கேள்வி இல்லையா?” என்பது போல பேசி இருந்தார்.

நடிகை சுருதி ஹாசனுக்கு இப்போது 38 வயதாகிறது. அவர் சாந்தனு ஹசாரி என்பவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

- Advertisement -

Read more

Local News