Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்‌மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது! ‘GOLDEN SPARROW’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதற்குப் பிறகு, அவர் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இது ஒரு ரொமாண்டிக் காமெடி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.படத்தின் முதல் பாடலுக்கான இறுதி மிக்சிங் பணி சமீபத்தில் நிறைவுற்றது. இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நேற்று அறிவித்தார். இதனை அடுத்து, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பாடலுக்காக “கோல்டன் ஸ்பேர்ரோ” என்ற தலைப்பு வைத்துள்ளனர். பாடல் விரைவில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன், மற்றும் பவிஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

- Advertisement -

Read more

Local News