Wednesday, April 10, 2024

தனுஷின் ராயன் கமல்-ன் இந்தியன் 2 மோதிக் கொள்கின்றனவா? உலாவும் அந்த தகவல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிலீசாக தயாராக இருக்கும் ராயன் படத்தை தனுஷ் நடித்து இயக்கி உள்ளார்.ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளிவரும் என்ற நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ரிலீஸ் செய்வதில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.அதே சமயம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரகி உள்ள இந்தியன் 2 படமும் மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவிற்கு இந்தாண்டின் தொடக்கம் நல்லதொரு தொடக்கமாகவே அமைந்தது.இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷ்-ன் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நான்கு படங்களும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.இப்படி தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாடத்தை தருகின்றன.

இப்படியிருக்க தனுஷின் ராயன் படம் அவருடைய இயக்கத்தால் மற்றும் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.இந்த படம் கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம்.இந்த படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்பை ஏற்படுத்தி நிலையில் ராயன் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகக உள்ளதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதையொட்டி ராயன் படத்தின் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளதாக கூறுகின்றனர்.

அதோபோல ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் அடுத்தடுத்து சென்னையில் எடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த இந்தியன் 2 படமும் மே மாதத்தில் ரிலீசாக வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.

தனுஷின் ராயன் மற்றும் கமல்லின் இந்தியன் 2 படமும் ஒரே‌நேரத்தில் ரிலீசாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சமயத்தில் கோடைக்கு ஒரு நல்ல சினிமா விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Read more

Local News