Tuesday, November 19, 2024

தனது பெற்றோரை சந்தித்த தளபதி விஜய்… வைரலாகும் புகைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள், நிவாரண உதவிகள் மற்றும் சேவைகளை மேற்கொண்டு வந்தவர், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினார்.

அதேபோல் 2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் கல்வி விருது விழாவின் ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது, இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளவுள்ளார்.‘லியோ’ படத்துக்கு பிறகு விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பெயர் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகரை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார், இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News