Saturday, September 21, 2024

‘தக் லைஃப் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவா? சுதா கொங்கரா சொன்ன அப்டேட்! #THUGLIFE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு உருவாக்கி வரும் திரைப்படம் ‘தக் லைப்’. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட இடங்களில் 120 நாட்களுக்கும் மேல் நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதா கொங்கரா இந்த தகவலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை படக்குழுவினர் கொண்டாடியதுடன், கமல், சிம்பு, மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் ரூ. 149.70 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும், இதுவரை எந்த கமல் ஹாசன் படங்களிலும் இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு இந்தப் படம் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News